பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37 ஆயிரத்து 930 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை வார்த்தகம் தொடக்கத்திலேயே 750க்கும் அதிக புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியதும் முதலீட்டாளர்கள் மும்முரம் காட்டியதால் சென்செக்ஸ் புள்ளி தொடர்ந்து கிடுவென உயரத் தொடங்கியது. சென்செக்ஸ் 960 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து அதிகபட்சமாக 38 ஆயிரத்து 892 புள்ளிகளைத் தொட்டது.

அதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி முந்தைய வர்த்தக நேர முடிவில் 11 ஆயிரத்து 407 புள்ளிகளில் முடிவடைந்த நிலையில் இன்று அதிகபட்சமாக 285க்கும் அதிக புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 694 புள்ளிகள் வரை சென்றது. 

பா.ஜ.க.வுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் மும்முரம் காட்டியதால் இந்தியப் பங்குச் சந்தைகள் வெகுவான உயர்வுடன் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

Sensex opens at - 38,819.68, up by 888.91 points; #Nifty opens at - 11,691.30, up by 284.15 points

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com