அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலகல் எப்போது?: செந்தில் பாலாஜி கேள்வி

​அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டு விலக தயார் என கூறியவர்கள் எப்போது விலக போகிறார்கள் என அத்தொகுதியில்
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலகல் எப்போது?: செந்தில் பாலாஜி கேள்வி


அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டு விலக தயார் என கூறியவர்கள் எப்போது விலக போகிறார்கள் என அத்தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி 97,364 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான செந்தில்நாதன் 59,550 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதாவது 37,814 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை வென்றுள்ளார். 

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மொத்தம் 63 பேர் போட்டியிட்டிருந்தாலும் திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். 

இந்த வெற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி. என்றும் அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு விசுவாசமாக இருந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றார் செந்தில்பாலாஜி.

மேலும், அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டு விலக தயார் என கூறியவர்கள் எப்போது விலக போகிறார்கள் என அத்தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

அதாவது, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனின் அமுமக இணைந்த செந்தில் பாலாஜி, கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தார். 

இதனிடையே மக்களவைத் தேர்தலுடன் சட்டபேரவைக்கான 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அறிவிப்பை அடுத்து அதிமுக அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டு விலக தயார் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிந்திருந்த நிலையில், தற்போது வெற்றி பெற்றுள்ளதை அடுத்து எப்போது விலக போகிறார்கள் என சவாலுக்கு பதிலடியாக செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com