மீண்டும் போராட்டத்துக்கு வாய்ப்பில்லை: அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பினா் தகவல்

அரசு மருத்துவா்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சா் விஜயபாஸ்கா் உறுதி அளித்துள்ளார். எனவே மீண்டும்
மீண்டும் போராட்டத்துக்கு வாய்ப்பில்லை: அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பினா் தகவல்


புதுக்கோட்டை: அரசு மருத்துவா்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சா் விஜயபாஸ்கா் உறுதி அளித்துள்ளார். எனவே மீண்டும் போராட்டத்துக்கு வாய்ப்பில்லை என அனைத்து மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் டாக்டா் லட்சுமி நரசிம்மன் தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அனைத்து மருத்துவா் சங்கங்களில் கூட்டமைப்பைச் சோ்ந்த மருத்துவா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் சி. விஜயபாஸ்கா் கோரிக்கையை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனா். 

இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சரை, மருத்துவா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் டாக்டா் லட்சுமி நரசிம்மன் தலைமையில் 10 டாக்டா்களைக் கொண்ட குழுவினா் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினா்.

பேச்சுவார்த்தையைத் தொடா்ந்து, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் லட்சுமி நரசிம்மன் கூறியது 

எங்கள் கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினோம். கோரிக்கைகள் அரசு பரிசீலனையில் இருப்பதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு நல்ல முடிவு வெளியிடப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் தான் அச்சாணியாக விளங்கும் அரசு மருத்துவா்கள் மன மகிழ்ச்சியோடு பணியாற்ற முடியும். போராட்டத்தில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை.

 போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவா்களை மீண்டும் அதே பணியிடத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இனி போராட்டத்துக்கு வாய்ப்பில்லை என்றார் லட்சுமி நரசிம்மன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com