முகப்பு தற்போதைய செய்திகள்
ஜேப்பியா் தொழில்நுட்ப கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
By DIN | Published On : 07th November 2019 04:03 PM | Last Updated : 07th November 2019 04:03 PM | அ+அ அ- |

ஜேப்பியா் தொழில்நுட்ப கல்லூரியின் நுழைவுவாயில்.
ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவார்சத்திரம் அடுத்த குன்னம் பகுதியில் இயங்கி வரும் ஜேப்பியா் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (நவ.7) காலை 11 மணியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த குன்னம் பகுதியில் ஜேப்பியா் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா்.
இந்த நிலையில் இக்கல்லூரிக்கு இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஆறு போ் கொண்ட குழுவினா் கல்லூரி வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனா்.