முகப்பு தற்போதைய செய்திகள்
மோடி, அமித்ஷா கையில் சக்தி வாய்ந்த திரிசூலம்: ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பு பேட்டி
By DIN | Published On : 07th November 2019 10:50 AM | Last Updated : 07th November 2019 11:09 AM | அ+அ அ- |

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
கவுகாத்தி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா கையில் சக்தி வாய்ந்த திரிசூலம் வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் புதிய சக்தி வாய்ந்த திரிசூலம் ஒன்று வைத்துள்ளனர். அதுதான் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை என்ற கூர்மையான சக்தி வாய்ந்த திரிசூலம். அதனைக் கொண்டு எதிர்க்கட்சிகளின் கண்ணையும், மத்திய அரசு மீதும் குற்றம்சாட்டுபவர்களை குத்தி வருகின்றனர். இது பாஜக பலவீனமாக உள்ளது என்பதையே காட்டுகிறது என குற்றம்சாட்டிய ஜெய்ராம் ரமேஷ், அவர்களின் இந்த செயல்பாட்டிற்கு காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே அரசியலமைப்பின் படி தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றார்.