அயோத்தி தீர்ப்பு: 8 தற்காலிக சிறைகள் தயார்

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தியில் உள்ள சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில்
அயோத்தி தீர்ப்பு: 8 தற்காலிக சிறைகள் தயார்

அயோத்தி: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தியில் உள்ள சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீா்ப்பளிக்க உள்ள நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 8 தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் நவம்பர் 14 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால் உள்ளதால், அயோத்தி வழக்கின் தீர்ப்பு வரும் வாரத்தில் அதாவது 10 ஆம் தேதிக்குள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது மிக முக்கியமான வழக்காக பார்க்கப்படுவதால், இதன் தீர்ப்புக்காக ஒட்டுமொத்த நாடே காத்திருக்கிறது.

"தீர்ப்பு வந்த பிறகு, ஏதேனும் நிகழந்துவிட்டால், அதற்கான பழி அவர்கள் மீது வந்துவிடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ் ரத்து செய்துள்ளது. இதனால், பிரசாரகர்கள் அனைவரும் தங்களது மையங்களிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்த பிறகு மட்டுமே பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, நேற்று பிரதமா் மோடி தலைமையில் தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சா்களின் கூட்டதில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வெளியாகவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக தேவையற்ற கருத்துகள் வெளியிடுவதை தவிர்க்கும்படியும், அயோத்தி தீா்ப்பை வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ யாரும் பார்க்கக் கூடாது என்று மத்திய அமைச்சா்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  

மேலும், நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமா் வலியுறுத்தியதாக அந்த வட்டாரங்கள் கூறின.

இந்நிலையில், உத்தரபிரேசம் மாநிலத்தின் அம்பேகத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரி வளாகங்களில் 8 தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் அம்பேத்கார் நகர் மாவட்டத்தில் இந்த தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பதற்ற நிலையை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தகைய சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரேச அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாலும் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தியில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com