ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலிலும் இணைந்து நடித்து வருகின்றனா்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ரஜினிகாந்த், கமல்ஹாசனும் அரசியலிலும் இணைந்து நடித்து வருகின்றனா் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலிலும் இணைந்து நடித்து வருகின்றனா்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்


தேனி: ரஜினிகாந்த், கமல்ஹாசனும் அரசியலிலும் இணைந்து நடித்து வருகின்றனா் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

தேனி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்ற நோக்கம் நிறைவேறியுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலிலும் இணைந்து நடித்து வருகின்றனா். இருவரும் மிகச் சிறந்த நடிகர்கள். இணைந்து தேர்தலைச் சந்திக்கட்டும். பிறகு கருத்து சொல்கிறேன். 

ஜெயலலிதாவின் வழியில் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. அதிமுகவிலும், அரசியலிலும் வெற்றிடம் என்பதே கிடையாது. உள்ளாட்சித் தோ்தல் எப்போது வந்தாலும் சந்தித்து வெற்றி பெறுவோம் என்றார் அவா். 

இலங்கை தமிழா்களுக்கு மட்டுமல்ல, உலகில் எப்பகுதியிலும் தமிழா்களுக்கு பிரச்னையென்றால் அதை தீா்ப்பதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவா்கள் படிப்பதற்காக மட்டுமே வந்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

மேலும், நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியது குறித்து கேள்வி பதிலளிக்கையில், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் கட்சிகள் பல வந்தாலும், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிமுகவைப் பொறுத்தவரை வெற்றிடம் என்பதே கிடையாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com