முகப்பு தற்போதைய செய்திகள்
கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் டிஆர்பி இணையதளத்தில் வெளியீடு
By DIN | Published On : 26th November 2019 12:16 PM | Last Updated : 26th November 2019 12:16 PM | அ+அ அ- |

கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கணினி பயிற்றுநர் நிலை -1-க்கான (முதுகலை ஆசிரியர்) தேர்வு ஜூன் 23, 27ஆம் தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகளுக்காக தேர்வு எழுதியவர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று திங்கள்கிழமை (நவ.25) www.trb.tn.nic.in என்ற இணையளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.