நவ.26: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று செவ்வாய்கிழமை (நவ.26) பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்தும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்தும்
நவ.26: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னை: சென்னையில் இன்று செவ்வாய்கிழமை (நவ.26) பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்தும், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகின்றது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலையில் மாற்றமின்றியும் விற்பனையாகி வந்தநிலையில், இன்று  பெட்ரோல், டீசல் விலை நிலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.72 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் ரூ.69.47 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com