கனமழை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
By DIN | Published on : 28th November 2019 07:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தமிழகம் முழுவதும் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
கனமழையை அடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், கனமனை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்து தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார்.
மேலும் இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.