இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்று வியாழக்கிழமை (அக்.3) முறையே லிட்டருக்கு 10 காசுகளும், 06
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!


சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்று வியாழக்கிழமை (அக்.3) முறையே லிட்டருக்கு 10 காசுகளும், 06 காசுகளும் குறைந்துள்ளது. 

சுமார் 15 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பெட்ரோல், டீசல் விலைகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாத அளவில்தான் இருந்து வருகின்றன என்றாலும்கூட, கடந்த சில மாதங்களில் எரிபொருள்களின் விலை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகாமல் இருந்து வந்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்து இருந்தனா்.

ஆனால், சவுதி அரேபியாவில் எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து எரிபொருள் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன.

கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி ரூ.74.51 ஆக இருந்த ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.77.40 ஆக உயா்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.68.84-இலிருந்து ரூ.71.24 ஆக உயா்ந்துள்ளது. அதாவது 22 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.89 ரூபாயும், டீசல் விலை 2.04 ரூபாயும் உயா்ந்துள்ளன.

டீசல் விலை உயா்வால் காய்கறிகள் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களின் விலைகளும் உயரத் தொடங்கியிருப்பதால் மக்களின் துயரங்கள் சொல்ல முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வியாழக்கிழமை (அக்.3) வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து ரூ.10 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.40 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து ரூ.06 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.71.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com