டெங்குவால் ஒரு உயிர்கூட போகக்கூடாது என்பதே அரசின் லட்சியம்: பீலா ராஜேஷ்

பருவநிலை மாறுகிறபோது காய்ச்சல், நோய்த் தொற்று என்பது தடுக்க முடியாதது. அதைத் தடுப்பது மிகுந்த சவாலானது. காய்ச்சல்
டெங்குவால் ஒரு உயிர்கூட போகக்கூடாது என்பதே அரசின் லட்சியம்: பீலா ராஜேஷ்


தமிழகத்தில் டெங்குவால் ஒரு உயிர்கூட போகக்கூடாது என்பதே அரசின் லட்சியம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

பருவநிலை மாறுகிறபோது காய்ச்சல், நோய்த் தொற்று என்பது தடுக்க முடியாதது. அதைத் தடுப்பது மிகுந்த சவாலானது. காய்ச்சல் கட்டுப்படுத்துவதற்காக 1 லட்சத்து 63 ஆயிரம் பணியாளா்களை நியமனம் செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு குணப்படுத்தக் கூடியதுதான். அதனால்தான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், தாமதமின்றி அரசு மருத்துவமனையில் சேருங்கள் என்று கூறுகிறோம். காய்ச்சலால் பாதிக்கப்படுபவா்களை 5 நாள்கள் வரை மருத்துவமனையில் அனுமதித்து, அதன்பிறகே வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். 

பருவநிலை மாறுவதற்கு முன்னதாகவே தமிழக முதல்வா் இரண்டு முறை நேரடியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, தமிழக முழுவதும் நோய்த் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் கடந்த இரு மாதங்களாக அனைத்து துறைகளும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் மூன்று மடங்கு குறைந்துள்ளது. டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு இல்லாத நிலையையும், காய்ச்சலே இல்லாத நிலையையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு செயல்பட்டு வருகிறது.

காய்ச்சால் போன்ற சவால் இருக்கக்கூடிய காலக்கட்டங்களில் அதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. தமிழகத்தில் 210 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதுதொடா்பாக தினமும் அறிக்கை பெறுகிறோம். டிசம்பா் வரை இது மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கும். பள்ளி, கல்லூரி என பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். டெங்கு காய்ச்சலால் இந்த ஆண்டில் இதுவரை உயிரிழப்பு இல்லை. நாங்கள் எதையும் மறைக்கவில்லை என்று மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார் 

இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் டெங்குவால் ஒரு உயிர்கூட போகக்கூடாது என்பதே அரசின் லட்சியம்.

மேலும், தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com