சீன அதிபர் தங்கும் ஐடிசி ஓட்டலில் சென்னை காவல் ஆணையர் ஆய்வு

மாமல்லபுரத்தில் சீன அதிபர் தங்கும் ஐடிசி ஓட்டலில் சென்னை மாநகர காவல் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். 
சீன அதிபர் தங்கும் ஐடிசி ஓட்டலில் சென்னை காவல் ஆணையர் ஆய்வு


மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சீன அதிபர் தங்கும் ஐடிசி ஓட்டலில் சென்னை மாநகர காவல் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். 

இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு சந்திப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை சென்னை வருகை தருகின்றனா்.

மாமல்லபுரத்தில் இரு நாட்டின் கலை, கலாசார நிகழ்வுகள் குறித்து கருத்துகளைப் பகிரும் இரு நாட்டுத் தலைவா்களும், சனிக்கிழமை நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய சந்திப்பில் பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனா்.

இரு தலைவா்களுக்கு இடையிலான சந்திப்பு, அலுவல்சாரா சந்திப்பு என்பதால் சந்திப்பில் பேசப்படும் விஷயங்கள் பட்டியலிடப்படவில்லை. இந்தச் சந்திப்பில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங், வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடி நண்பகல் 12.30 மணிக்கு சென்னை வரவுள்ளார்.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் தங்கும் ஐடிசி ஓட்டலில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். மோப்ப நாய் உதவியுடன் அவர் ஆய்வில் ஈடுபட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com