முகப்பு தற்போதைய செய்திகள்
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு நாங்கள் தான் காரணம்: பொன்.ராதாகிருஷ்ணன்
By DIN | Published On : 24th October 2019 06:25 PM | Last Updated : 24th October 2019 06:25 PM | அ+அ அ- |

திருப்பத்தூர்: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்திலும், விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருப்பத்தூரில் நடைபெற்ற மருதுபாண்டியர் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்.தாதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் எங்கள் கூட்டணியான அதிமுக வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்கள் முக்கிய காரணம். பாஜகவை தமிழக்திதல் உள்ள ஒவ்வொருவரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் எங்களது கூட்டணி தொடர்வது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அதிகாரிகளையும் காட்டிக்கொடுத்தால், அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலத்திலும் பாஜக முன்னிலை பெற்றிருப்பது மகிழ்ச்சியானது என்று கூறியவர், அந்த மாநிலங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறும் என்று கூறினார்.