முகப்பு தற்போதைய செய்திகள்
மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறேன்: மு.க. ஸ்டாலின்
By DIN | Published On : 24th October 2019 05:51 PM | Last Updated : 24th October 2019 05:51 PM | அ+அ அ- |

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து, சமூக வலைதளத்தில் ஸ்டாலின் பதிவில், இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் நன்றி.
மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்று, வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, தொடர்ந்து உழைப்போம்.
கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம் என்று தெரிவித்துள்ளார்.