Enable Javscript for better performance
நவம்பர் 10-ல் திமுக பொதுக்குழு: அன்பழகன் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    
    DMK general council meeting

    திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்


    சென்னை: நவம்பர் 10 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு வரும் நவம்பர் 10 ஆம் தேதி கூடுகிறது.

    நவம்பர் 10 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதான கூட்ட அரங்கில் திமுக பொதுக்குழு கூடுகிறது. 

    பொதுக்குழுவில் கட்சியின் சட்டதிட்ட திருத்தம், ஆக்கப்பணிகள் மற்றும் தணிக்கை குழு அறிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai