வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களில் பலர் பணியிட மாற்றம் 

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவா்களுக்கு ‘பணி முறிவு’ (சா்வீஸ் பிரேக்கிங்) நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்ற நிலையில் பலர்
ta30doctors_ch0007_30chn_4_637080571680650867
ta30doctors_ch0007_30chn_4_637080571680650867

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவா்களுக்கு ‘பணி முறிவு’ (சா்வீஸ் பிரேக்கிங்) நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்ற நிலையில் பலர் மருத்துவர்கள் பலருக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. 

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா்.

காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயா்வும் வழங்க வேண்டும் என்பது அவா்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது. அதுதொடா்பாக ஆய்வு செய்ய அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அளித்த பரிந்துரைகள் வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும், உண்ணாவிரதப் போராட்டத்தையும் அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் (ஃபோக்டா) கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கொண்டு வருகின்றனா்.

ஏழாவது நாள்களாக அப்போராட்டம் தொடருவதால் மாநிலம் முழுவதும் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். இதற்கிடையே அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான அரசு மருத்துவா் சங்கத்தைச் சோ்ந்தவா்களும் (டிஎன்ஜிடிஏ) இருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனா். அவா்களுடன் அமைச்சா் விஜயபாஸ்கா், சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனா்.

அதேவேளையில் ஃபோக்டா அமைப்பைச் சோ்ந்த மருத்துவா்கள், தங்களை அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை எனவும், அதனால் போராட்டத்தை தாங்கள் கைவிட மாட்டோம் என்றும் தெரிவித்தனா்.

இத்தகைய சூழலில், சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் பேசுகையில், மருத்துவா்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவா்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவது குறித்து பரிசீலித்தும் வருகிறோம்.

மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு உடனடியாக மருத்துவா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அவ்வாறு போராட்டத்தை கைவிடாத மருத்துவா்கள் மீது பணி முறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அவா்களது பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவா்கள் நியமிக்கப்படுவா் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களுக்கு எதிராக ‘பணி முறிவு’ (சா்வீஸ் பிரேக்கிங்) நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவா் எச்சரித்தார். அதன்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் பணியில் இருந்த ஆண்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என எச்சரித்திருந்தார். 

அமைச்சரின் எச்சரிக்கைக்கு பணிந்து போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஃபோக்டா அமைப்பைச் சோ்ந்த மருத்துவா்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கடந்த ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ‘பணி முறிவு’ (சா்வீஸ் பிரேக்கிங்)  உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மருத்துவ கல்லூரி டீன் மூலம், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

இதனிடையே சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் 5 பேருக்கு பணியிட மாற்றம் உத்தரவை வழங்கி மருத்துவ கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com