பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது வெட்கக்கேடான மனித உரிமை மீறல்: சென்னை உயநீதிமன்றம்

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது வெட்கக்கேடான மனித உரிமை மீறல் என்றும், பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை
பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது வெட்கக்கேடான மனித உரிமை மீறல்: சென்னை உயநீதிமன்றம்


சென்னை: பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது வெட்கக்கேடான மனித உரிமை மீறல் என்றும், பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்கு கருணை காட்ட முடியாது என்று சென்னை உயநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஒருவரை பணி நீக்கம் செய்து நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், அந்த பணியாளரை மீண்டும் பணியில் சேர்க்கும் படி தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதன் மேல்முறையீட்டு மனு இன்று வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாலியல் தொழிலில் ஈடுபட்டவரை பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் நடவடிக்கை சரியானது. பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்கு கருணை காட்ட முடியாது. பெண்களுக்கு எதிராக வேலை செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் கடமை என்று குறிப்பிட்டதோடு, பணியாளரை சேர்க்க தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது வெட்கக்கேடான மனித உரிமை மீறல் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com