சுடச்சுட

  

  பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை 0.1% குறைப்பதாக அறிவிப்பு

  By DIN  |   Published on : 09th September 2019 01:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  State Bank of India


  இந்தியாவின் முதன்மை வங்கியான எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை நாளை முதல் 0.1% குறைப்பதாக அறிவித்துள்ளது. வட்டி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. 

  கடந்த மாதம் 7 ஆம் தேதி ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 0.35 சதவீதம் குறைக்கப்பட்டு 5.40 சதவீதமாக நிர்ணயித்தது. அதேபோல வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.35 சதவீதம் குறைத்து 5.15 சதவீதமாக அறிவித்தது இந்திய ரிசர்வ் வங்கி.

  இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து 4-ஆவது முறையாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டியும், பொதுமக்கள் வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை உள்ளிட்ட டெபாசிட்டுகளுக்கான வட்டியும் குறைந்தது.

  இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெபாசிட்டுகளுக்கு அளிக்கும் வட்டிவிகித அடிப்படையிலான கடன் வட்டி விகிதத்தை 0.1% . குறைப்பதாக அறிவித்துள்ளது. தற்போது 8.25% உள்ள கடன் வட்டி விகிதம் 8.15% குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகன கடனுக்கான இஎம்ஐ குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  எஸ்பிஐ வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்டுடன் இணைத்துள்ளதால் ரிசர்வ் வங்கி எப்போதெல்லாம் வட்டி குறைப்பு செய்கிறதோ, அப்போதெல்லாம், எஸ்பிஐ வங்கியும் வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. இதனால் வங்கிகளில் டெபாசிட்டுகளுக்கான வட்டியும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  மொத்த சந்தை பங்குகளில், எஸ்பிஐயில் வீட்டுக் கடன்கள் மற்றும் வாகன கடன்கள் முறையே 35% மற்றும் 36% இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வட்டி குறைப்பினால் பெரும்பான்மையான மக்கள் பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  இந்த கடன் வட்டி விகித குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai