வெளிநாட்டு முதலீடுகள்: வெள்ளை அறிக்கை வெளியிட அதிமுக அரசுக்கு துணிவு உண்டா? - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்தி நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சிக்கு மத்திய பாஜக அரசு முட்டுக்கொடுத்து வருகிறது
வெளிநாட்டு முதலீடுகள்: வெள்ளை அறிக்கை வெளியிட அதிமுக அரசுக்கு துணிவு உண்டா? - மு.க.ஸ்டாலின்


திருவண்ணாமலை: வெளிநாட்டு முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட அதிமுக அரசுக்கு துணிவு உண்டா என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுக-வின் முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். 

அப்போது, திமுக தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆனதை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த முப்பெரும் விழாவில் பேனர் வைக்காகதற்கு நன்றி. பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது. இனிமேலும் யாரும், எந்த விழாவிலும் பேனர் வைக்கக் கூடாது. 

தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சிக்கு மத்திய பாஜக அரசு முட்டுக்கொடுத்து வருகிறது. 

மக்களின் வரிப்பணத்தில் அதிமுக அமைச்சர் இன்ப சுற்றுலா சென்று வருகின்றனர். வெளிநாட்டு மூதலீகள் பற்றி பேசுபவர்கள், அவர்கள் சுற்றுலா சென்று தமிழகத்திற்கு கொண்டு வந்த வெளிநாட்டு முதலீடு நிறுவனங்களின் பெயர்களை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட அதிமுக அரசுக்கு துணிவு உண்டா என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், கருணாநிதி ஆட்சியின் சாதனையை எவரலாம் முறியடிக்க முடியாது. கருணாநிதியின் சாதனைக்கு டைடல் பார்க் ஒன்றே போதும். 

நாங்கள் கருணாநிதியை பார்த்துதான் பொறாமைப்படுவோம், வேறு யாரையும் பார்த்து பொறாமைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கருணாநிதி பிறந்த நாள் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும்.
  
இந்தி திணிப்பை திமுக பார்த்துக்கொண்டு இருக்காது, இந்தியாவா? இந்தியா? என்றால் இந்தியா தான் வேண்டும் என்ற ஸ்டாலின், மொழிப்போராட்டத்திற்கு தயாராக இருங்கள் என்று கோரிக்கை விடுத்து பேசினார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com