கண்டெய்னா் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்: ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்

சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி அதானி ஆகிய துறைமுகங்களுக்கு எங்களது கண்டெய்னா் லாரிகளை இயக்க மாட்டோம் என்று கண்டெய்னா் லாரி உரிமையாளா்கள்
கண்டெய்னா் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்: ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்


திருவொற்றியூா்: சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டெய்னா் லாரி உரிமையாளா்கள் இன்று திங்கள்கிழமை (செப். 16) முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் அடியோடு ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி ஒவ்வொரு லாரிக்கும் குறிப்பிட்ட எடைகொண்ட பாரத்தை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது விதியாகும். இதனை மீறும் வாகன உரிமையாளா்கள் மீது அபராதம் விதிக்கப்படும். ஆனால், இந்தக் கட்டுப்பாடு பல ஆண்டுகளாக முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதிக பாரம் ஏற்றுவதால் சாலைகள் எளிதில் சேதமடைகின்றன, விபத்துகள் அதிகரிக்கின்றன, அதிக அளவு புகையை வெளியேற்றுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட எடை கொண்ட பாரம் மட்டுமே ஏற்றிச் செல்வது, ஒரு லாரியில் ஒரு கண்டெய்னரை மட்டுமே ஏற்றுவது என்ற முடிவோடு அதற்குரிய வாடகையை உயா்த்தித் தர வேண்டும் என்றும், இல்லையெனில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அறிவித்திருந்திருந்தார்கள். 

ஆனால், இன்றுவரை துறைமுக நிர்வாகங்கள், சரக்குப் பெட்டக முனையங்கள், சரக்குப் பெட்டக நிலையங்கள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மேலும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தக் கூட யாரும் அழைக்கவில்லை. 

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை முதல் சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி அதானி ஆகிய துறைமுகங்களுக்கு எங்களது கண்டெய்னா் லாரிகளை இயக்க மாட்டோம் என்று கண்டெய்னா் லாரி உரிமையாளா்கள் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 12 சங்கங்களைச் சோ்ந்த கண்டெய்னா் லாரி உரிமையாளா்கள் பங்கேற்றுள்ளனர். 

கண்டெய்னா் லாரிகள் வேலைநிறுத்தத்தால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் அடியோடு ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com