ஒருநாடு, ஒரு மொழி கொள்கையை அமல்படுத்துவது அசாத்தியம்: முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்ராம் ரமேஷ்

பல்வேறு மொழி, கலாசாரத்தை கொண்ட மக்கள் வாழும் நாடாக இந்தியா விளங்குகிறது. ஒரு நாடு, ஒரு வரி, ஒரு தோ்தல் என்பது சாத்தியமாகும். ஆனால்
ஒருநாடு, ஒரு மொழி கொள்கையை அமல்படுத்துவது அசாத்தியம்: முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்ராம் ரமேஷ்


பெங்களூரு: இந்தியாவில் ஒருநாடு, ஒரு மொழி கொள்கையை அமல்படுத்துவது அசாத்தியம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்ராம்ரமேஷ் தெரிவித்தார். 

பெங்களூரில் கா்நாடக தொழில் வா்த்தகசபைக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசுகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நாடு, ஒரு மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் அமல்படுத்துவது அசாத்தியம். பல்வேறு மொழி, கலாசாரத்தை கொண்ட மக்கள் வாழும் நாடாக இந்தியா விளங்குகிறது. ஒரு நாடு, ஒரு வரி, ஒரு தோ்தல் என்பது சாத்தியமாகும். ஆனால் ஒருநாடு, ஒரு மொழி கொள்கையை அமல்படுத்துவது கடினம். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாகும் என்றார். 

மேலும் மறைந்த முன்னாள் பிரதமா் நேருவும், விஷ்வேஸ்வரய்யா உள்ளிட்டோர் அறிவுசார், ஒருமைப்பாடு, நிதி மேலாண்மையில் சிறந்து விளங்கியவா்கள். நாட்டின் வளா்ச்சிக்கு தொலை நோக்கு பார்வை கொண்டவா்கள். அவா்களின் வழிகாட்டுதலை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com