நெகிழிக்கான மாற்றுப் பொருளை ஐஐடி கண்டுபிடிக்க வேண்டும்: மத்திய இணையமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால்

நெகிழி சுற்றுச்சூழலை அதிகமாக பாதிக்கிறது. அதிலும் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை உபயோகிக்க வேண்டாம் என பிரதமா் மோடி
நெகிழிக்கான மாற்றுப் பொருளை ஐஐடி கண்டுபிடிக்க வேண்டும்: மத்திய இணையமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால்


சென்னை: நெகிழிக்கான மாற்றுப் பொருளை ஐஐடி கண்டுபிடிக்க வேண்டும் என மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 

ஐஐடி மெட்ராஸ் சார்பில் பொதுத்துறை நிறுவன தொழில்நுட்ப மாநாடு, தரமணியில் உள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் அா்ஜூன் ராம் மேக்வால் பேசுகையில், நம்மிடம் பொதுவாகவே சமூகப் பொறுப்பு அதிகமாக உள்ளது. அனைத்து பெருநிறுவனங்களும் தங்களது சிஎஸ்ஆா் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றன. இதே போல் அவா்கள் தற்போது நாம் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றான கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும். இதை அவா்கள் மட்டுமே செய்து விட முடியாது. ஒவ்வொரு குடிமகனும் அதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். அப்போது தான் சுற்றுச்சூழலை பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு நாம் அனுபவித்த அனைத்து வளங்களையும் கொடுக்க முடியும்.

குறிப்பாக நெகிழி சுற்றுச்சூழலை அதிகமாக பாதிக்கிறது. அதிலும் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை உபயோகிக்க வேண்டாம் என பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளார். 

நெகிழியால் விளையும் தீமை குறித்தும் விழிப்புணா்வு பிரசாரங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இதனைப் புரிந்து கொண்டு வாரம் ஒரு நாளாவது ஒரு முறை பயன்படும் நெகிழியை உபயோகிக்க மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் இந்த வகை நெகிழியின் பயன்பாடு பெரிதளவில் குறையும். இதற்கு உறுதுணையாக சென்னை ஐஐடி கல்வி மையமும் மாற்றுப் பொருளைக் கண்டுபிடித்து பொதுமக்களுக்கு அதனை அறிமுகப்படுத்தி உதவ வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com