Enable Javscript for better performance
பெரியாரின் 141-வது பிறந்த நாள்: திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    பெரியாரின் 141-வது பிறந்த நாள்: திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

    By DIN  |   Published on : 17th September 2019 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    periyar


    சென்னை: பெரியாரின் 141-வது பிறந்த நாளையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

    திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்க பதிவில், சுயமரியாதை - பகுத்தறிவு - சமூகநீதி - மொழியுரிமை - இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதைநெல்லாம் பெரியாரின் பிறந்தநாள்.

    தத்துவமாய் எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாகக் கொண்டே போராடுகிறோம்!

    பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்! வெல்வோம்! வாழ்க பெரியார்! என தெரிவித்துள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai