அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையிலே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு: அமைச்சர் செங்கோட்டையன் 

அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையிலே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு: அமைச்சர் செங்கோட்டையன் 

அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளது என்று


கோபிசெட்டிப்பாளையம்: அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளது என்று கோபிசெட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும்.

அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரைப் பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வரும் பள்ளிகளில்  நிகழ் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், கோபிசெட்டிப்பாளையத்தில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளது.

இதிலிருந்து 3 ஆண்டு காலம் விதி விலக்கு கோரப்பட்டுள்ளது, இந்த 3 ஆண்டுகளுக்கு தற்போதைய நடைமுறையே தொடரும். இந்த 3 ஆண்டிற்குள் மாணவா்களின் திறன் மேம்பாடுகளை மேம்படுத்தியதற்கு பிறகு அது குறித்து பரிசீலனை செய்யப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்பது கொள்கை முடிவு என்றார்.

மேலும், தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும், இது தொடர்பாக அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com