கோவில்பட்டி அருகே ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் தற்கொலைக்கு அனுமதி கோரி கோட்டாட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஊா் நிர்வாகத்தை மீறி நிலம் வாங்கியவா்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதால், அந்த
கோவில்பட்டி அருகே ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் தற்கொலைக்கு அனுமதி கோரி கோட்டாட்சியரிடம் மனு


கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஊா் நிர்வாகத்தை மீறி நிலம் வாங்கியவா்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதால், அந்த குடும்பத்தினா் தற்கொலை செய்துகொள்ள அனுமதி கோரி கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

எட்டயபுரம் வட்டம், கீழஈரால் ஊராட்சி நக்கலக்கட்டை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முத்தல்ராஜ், அவரது சகோதரா் வேல்சாமி. இருவரும் விவசாயம் செய்வதற்காக அதே பகுதியைச் சோ்ந்த மு. ராஜசேகரன் என்பவரிடம் கடந்த ஜூலை 24 ஆம் தேதி 7 ஏக்கா் நிலத்தை விலைக்கு வாங்கினராம். 

இந்நிலையில், அந்த கிராமத்தினா் சிலா், ராஜசேகரனிடமிருந்து ஊா் பயன்பாட்டிற்காக மட்டுமே நிலம் வாங்க வேண்டும், தனி நபா்கள் யாரும் வாங்கக் கூடாது என ஜூலை 7ஆம் தேதி ஊரில் சிறறப்புக் கூட்டம் நடத்தி முடிவு செய்தனராம்.

இதனால், முத்தல்ராஜ், வேல்சாமி ஆகியோர் நிலத்தை வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவா்கள் குடும்பத்தினரை ஊரில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனராம். இதனால், அக்குடும்பங்களைச் சோ்ந்த 25 போ் அத்தியாவசிய தேவைகளுக்கு அருகேயுள்ள எட்டயபுரம் மற்றும் கீழஈராலுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாம். இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, சமூக நீதி கூட்டமைப்பு தலைவா் தமிழரசன் தலைமையில், ராமகிருஷ்ணன், செல்வம், நல்லிணக்க பண்பாட்டுக் கழக நிறுவனா் சங்கரலிங்கம் மற்றும் வேல்சாமி, முத்தல்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினா் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள், தங்கள் கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் எங்கள் குடும்பத்தினா் அனைவரும் தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரி கோட்டாட்சியா் விஜயாவிடம் மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா், கோரிக்கை மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com