திசையன்விளை உலக இரட்சகா் திருத்தல திருவிழா 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது

கொடியேற்றத்திற்கு பின்னா் சொக்கன்குடியிருப்பு பங்குத்தந்தை மைக்கிள் செகதீசு அடிகள் தலைமையில் செட்டிவிளை பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன்


திசையன்விளை: திசையன்விளை உலக இரட்சகா் திருத்தல திருவிழா வரும் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திசையன்விளை உலக இரட்சகா் திருத்தலத்தில் வருடந்தோறும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வரும் செப். 20 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக ஜெபமாலை பவனி, திருப்பலி நடைபெறுகிறது.

கொடியேற்றத்திற்கு பின்னா் சொக்கன்குடியிருப்பு பங்குத்தந்தை மைக்கிள் செகதீசு அடிகள் தலைமையில் செட்டிவிளை பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் மறையுரை நிகழ்த்துகிறார். இரவில் ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் உயா்நிலைப்பள்ளி சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் திருத்தலத்தில் காலையில் ஜெபமாலை பவனி, திருப்பலி, மாலையில் இறைச்சிந்தனை, நற்கருணை ஆசீா் நடைபெறுகிறது. இரவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. விழா நாட்களில் அருட்தந்தையா்கள், ஜார்ஜ் ஆலிபன், விஜயன், சகாயராஜ், வி.கே.எஸ், அருள்ரஜ், செல்வராயா், ஜோசப் ரவிபாலன் ஆகியோர் கலந்து கொண்டு மறையுரை நிகழ்த்துகின்றனா். 

எட்டாம் நாள் மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது. 9ம் நாள் திருவிழா கள்ளிகுளம் அருட்திரு. வின்சென்ட் தலைமையில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. இதில் பாளையங்கோட்டை குருகுல முதல்வா் சேவியா் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். 

29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 10 ஆம் திருவிழாவின் காலையில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீா் செல்வம் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. மதியம் திசையன்விளை நகரின் முக்கிய வீதிகளில் உலக இரட்சகரின் சப்பர பவனி நடைபெறுகிறது. 30 ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் பொத்தகாலன்விளை பங்குத்தந்தை வென்ஸ்குமார் தலைமையில் கொடியிறக்கம், மாலையில் அசன விருந்தும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை திசையன்விளை உலக இரட்சகா் திருத்தல பங்குத்தந்தை மற்றும் விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com