மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான விவகாரம்: தாமாக முன்வந்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான விவகாரம் தொடா்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உயா்நீதிமன்றம்
மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான விவகாரம்: தாமாக முன்வந்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு


சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான விவகாரம் தொடா்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியது. அப்போது ஆஜரான வழக்குரைஞா் ஜார்ஜ் வில்லியம்ஸ், சென்னையை அடுத்துள்ள முகலிவாக்கத்தில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்தது. இந்தத் தண்ணீரை மிதித்த தீனா என்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த சம்பவம் தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து சிறுவனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்தார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த 

நீதிபதிகள், பொதுநல வழக்குத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com