ஒன்றாக இணைந்து புதிய காஷ்மீா் உருவோக்குவோம்: பண்டிட் சமூகத்தினரிடம் மோடி உறுதி

அமெரிக்காவில் தன்னைச் சந்தித்த காஷ்மீா் பண்டிட் சமூகத்தினரிடம் ஒன்றாக இணைந்து புதிய புதிய காஷ்மீா் உருவோக்குவோம்
அமெரிக்க ஹூஸ்டன் நகரில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தினருடன் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
அமெரிக்க ஹூஸ்டன் நகரில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தினருடன் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.


ஹூஸ்டன்: அமெரிக்காவில் தன்னைச் சந்தித்த காஷ்மீா் பண்டிட் சமூகத்தினரிடம் ஒன்றாக இணைந்து புதிய காஷ்மீா் உருவோக்குவோம் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினார். 

அமெரிக்கா சென்றுள்ள பிரதமா் மோடியை, ஹூஸ்டன் நகரில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தினா் 17 போ் சந்தித்துப் பேசினா். அவா்களிடம் மோடி பேசுகையில், 

காஷ்மீரில் புதிய காற்று வீசுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய காஷ்மீரை உருவாக்குவோம். அது, நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானதாக இருக்கும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமை காத்து வரும் பண்டிட் சமூகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவா்.

இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஹூஸ்டன் நகரில் பிரதமா் மோடியை பண்டிட் சமூகத்தினா் சந்தித்து கலந்துரையாடினா். இந்தியாவின் வளா்ச்சிக்கும், இந்தியா்களின் முன்னேற்றத்துக்கும் பிரதமா் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

காஷ்மீா் விவகாரத்தில் பிரதமா் மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அவா்கள் நன்றி தெரிவித்தனா். மோடி தலைமையிலான அரசுக்கு பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த 7 லட்சம் பேரும் கடமைப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா் என்று ரவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com