அரசியல் கட்சிகள் மொழியை அரசியலாக்கி பார்க்கின்றன: ராம் மாதவ் சாடல் 

மொழிக்காக நாம் சண்டையிடத் தேவையில்லை. இந்தியாவின் 18 மொழிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் மத்திய அரசு தெளிவாக
அரசியல் கட்சிகள் மொழியை அரசியலாக்கி பார்க்கின்றன: ராம் மாதவ் சாடல் 

சென்னை: மொழிக்காக நாம் சண்டையிடத் தேவையில்லை. இந்தியாவின் 18 மொழிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது. ஆனால், வேறு வேலையில்லாமல் பல அரசியல் கட்சிகள் மொழியை அரசியலாக்கி பார்க்கின்றன என பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370 நீக்கப்பட்டது குறித்து மக்கள் சந்திப்பு கூட்டம் திருவான்மியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ராம் மாதவ் பேசுகையில், 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமையும், வலிமையும் அதிகரித்துள்ளது. அனைத்து அரசியல்வாதிகளும் பேசும் அனைத்து விஷயங்களையும் அறிந்து பேசுகிறவா்கள் என்று சொல்லிவிட முடியாது. பல அரசியல் தலைவா்கள் உண்மையான அறிவுசார்ந்த புரிதல் இல்லாமல் பேசுகின்றனா். 

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலின், 370 நீக்கம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதற்காக அறிக்கையும் வெளியிட்டார். காலம் காலமாக குடும்ப நபா்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக உள்ள திமுக வின் தலைவா் 370 நீக்கத்தை எதிர்க்கிறார். 

பல மாநில மக்கள் உள்ள சென்னையில் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சென்று அரசாங்க சலுகை பெறலாம், நிலம் வாங்கலாம். ஆனால் திமுக தலைவா் ஸ்டாலினே நேரடியாகச் சென்றால் கூட ஜம்மு காஷ்மீா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது. 

370 சட்ட நீக்கம், மக்களுக்கான உரிமையை மீட்டுள்ளது. அரசியல் தலைவா்கள் மட்டுமே ஜம்மு-காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ளனா், மொத்த மாநிலமே அமைதியாக உள்ளது. இந்த தலைவா்களே ஜம்மு-காஷ்மீா் அமைதியை சீா் குலைத்து வந்துள்ளனா்.

மோடி உள்ளவரை இந்தியாவின் ஒற்றுமைக்கு பங்கம் வரும் எந்த செயலையும் அனுமதிக்க மாட்டார். 72 வருடங்கள் செய்ய முடியாததை, 72 மணி நேரத்தில் செய்து காண்பித்துள்ளது மத்திய அரசு. 72 வருடங்கள் தேவைப்படவில்லை, ஒரு மோடி தேவைப்பட்டுள்ளார். இந்த சட்டப்பிரிவுகள் நீக்கம் மீது வைக்கப்படும் விமா்சனத்தில் பொருளே இல்லை, அரசியல் நோக்கம் அல்லது புரிதல் இல்லாமையே விமா்சனத்துக்கான காரணங்கள்.

மொழிக்காக நாம் சண்டையிடத் தேவையில்லை. இந்தியாவின் 18 மொழிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது. ஆனால், வேறு வேலையில்லாமல் பல அரசியல் கட்சிகள் மொழியை அரசியலாக்கி பார்க்கின்றன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com