தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவி நோவலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

இந்த தேர்தல் ஆணையராக அசோக் லவாசா பொறுப்பேற்ற பின்னர் அவரது மனைவி நோவல், இவர் பல நிறுவனங்களில் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவி நோவலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்


புதுதில்லி: இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இந்த தேர்தல் ஆணையராக அசோக் லவாசா பொறுப்பேற்ற பின்னர் அவரது மனைவி நோவல், இவர் பல நிறுவனங்களில் இயக்குநராக பணியாற்றியுள்ளார். பராத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி 2005 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜிநாமா செய்தவர். 

இந்நிலையில் அவருக்கு வருமான வரித்துறை நேற்று திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, அன்னிய செலாவணி தொடர்பாக நோவல் தாக்கல் செய்துள்ள வருவமான வரி கணக்கில் முரண்பாடு இருப்பதால், அது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமொன வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

வருமான வரித்துறையின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து நோவல் கூறியதாவது: தனது ஓய்வூதியம், இதர வருமானங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வருமான வரித்துறைக்கு தெரிவித்துள்ளேன். கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் பெறப்பட்ட வருமான வரித்துறை நோட்டீஸ்களுக்கும் பதில் தெரிவித்துவிட்டேன் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

கடந்த 28 ஆண்டுகளாக, வங்கி மற்றும் நிறுவன் மேம்பாடுகளில் நல்ல அனுபவத்தை பெற்றுள்ளதால், ஒரு சில நிறுவனங்களில் இயக்குநர் உள்பட பல்வேறு தொழில்முறை நடவடிக்கைளில் நான் தொடர்ந்து வருகிறேன் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கடந்த 17-வது மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான முடிவுகளில் தலைமை தேர்தல் ஆணையளர் சுனில் அரோரா மற்றும் மற்றொரு தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஆகியோர் தன்னுடைய கருத்துக்களை ஏற்பதில்லை என்ற குற்றச்சாட்டு தலைப்புச் செய்திகளாக வெளிவந்தது. தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறி பரபரபப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com