வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டித்துள்ளதாக போலி அறிவிப்பு வெளியாகிறது ஜாக்கிரதை!

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 என்று வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவித்துள்ளது,
வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டித்துள்ளதாக போலி அறிவிப்பு வெளியாகிறது ஜாக்கிரதை!


வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 என்று வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவித்துள்ளது, ஆனால் இது அக்டோபர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒரு போலி அறிவிப்பு வெளியாகி வருகிறது என எச்சரிக்கைப்பட்டுள்ளது. 

கடந்த 218 - 19ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்துக்கான வருமான வரி படிவத்தை சமர்ப்பிக்க வருகிற 30-ஆம் தேதி கடைசி நாளாகும். வருகிற 30-ஆம் தேதிக்குள் வருமான வரி படிவம் தாக்கல் செய்யாவிட்டால், தாமத கட்டணமாக ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலுத்த நேரிடும். வட்டி அபராதம் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

மின்னணு முறை மூலம் தாக்கல் செய்யும்போது ஏற்படும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோரின் வசதிக்காக வருமான வரித் துறை கர்தாதா இ - சஹயோக் அபியான் என்ற திட்டத்தை வருமான வரி படித்தை தயாரிப்பவர்களின் உதவியுடன் தொடங்கியுள்ளது. வரி செலுத்துவோர், வருமான வரி படிவத்தை தயாரிப்பவர்களிடம் ரூ.250 செலுத்தி, இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, வருமான வரி தாக்கல் செய்யவதற்கு அக்டோபர் 15 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக ஒரு போலி அறிவிப்பு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

இந்நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பாக, ஆன்லைன் ஊடகங்களில் வெளியாகும் ஒரு அறிவிப்பு தொடர்பாக வருமான வரித்துறை நேற்று புதன்கிழமை ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
 
அதில், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44 ஏபி படி, நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், உரிமையாளர்கள் போன்ற கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டிய அனைவருக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும். 

ஆனால், வருமான வரி தாக்கல் செய்யவதற்கு அக்டோபர் 15 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக ஒரு போலி அறிவிப்பு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது உண்மையானதல்ல. வரி செலுத்துவோர் இதுபோன்ற தவறான செய்திகளுக்கு இரையாக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று வருமான வரித்துறை பதிவிட்டுள்ள ஒரு டிவிட்டில் தெரிவித்துள்ளது.

மேலும், வருமான வரித்துறையில் இதுபோன்ற போலி அறிவிப்புகள் வருவது இது முதல் முறை அல்ல. தனிநபர்களுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாகக் கூறி இதேபோன்ற அறிவிப்பு ஆகஸ்டில் ஆன்லைனில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com