ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம்: முதல்வர் பழனிசாமி பேட்டி

கரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம் என்று முதல்வர் தெரிவித்தார். 
ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம்: முதல்வர் பழனிசாமி பேட்டி

அம்மா உணவக
சென்னை: சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு  மேற்கொண்டாார். கரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம் என்று முதல்வர் தெரிவித்தார். 

அம்மா உணவகங்களில் ஆய்வு செய்தபின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 

அம்மா உணவகங்களில் உணவின் தரம் குறித்தும், பின்பற்றப்படும் விதிகள் மற்றும் உரிய இருப்பு, சமையல் அறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டோன். அம்மா உணவகங்களில் உணவு அருந்தி உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தேன். பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு கைகொடுக்கிறது. அம்மா உணவகத்தில் உணவு தரமாகவும், சுவையாகவும் இருந்ததாக பாராட்டு தெரிவித்த முதல்வர், அம்மா உணவகத்தில் தினமும் 4.5 லட்சம் பேர் உணவருந்துகின்றனர். அம்மா உணவகங்களில் மட்டும்தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது. 

தில்லி மாநாட்டில் பங்கேற்றோர் விவரங்கள் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தெரிவிக்க கோரினோம். தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படும். 

கரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். அதனால்தான் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டத்தை பொதுமக்கள் மதிக்க வேண்டும்.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். கோயில், தேவாலயம், மசூதிகள் மூடப்பட வேண்டும்.  சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் ஏற்கெனவே 17 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு என்ன நிலை என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என்று முதல்வர் கூறினார். 

முதல்வருடன் அமைச்சர் ஜெயகுமார், அதிகாரிகள் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com