கான்பூரில் 8 வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட்டனர்; பாஸ்போர்ட் பறிமுதல் 

தில்லியில் அண்மையில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 8 வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களின் பாஸ்போர்ட்டையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.  
கான்பூரில் 8 வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட்டனர்; பாஸ்போர்ட் பறிமுதல் 


கான்பூர்: தில்லியில் அண்மையில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 8 வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களின் பாஸ்போர்ட்டையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.  

மேற்கு தில்லி, நிஜாமுதீன் பகுதியில், தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மா்கஸ் பங்களேவாலி மசூதி உள்ளது. இந்த மசூதியில் மாா்ச் 13-இல் இருந்து 15- ஆம் தேதி வரை மத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுமாா் 8,000 போ் கலந்து கொண்டுள்ளனா். இந்த நிகழ்வு தில்லி அரசின் உத்தரவை மீறி நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில், மத போதனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் காவல் துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த மசூதியில் தங்கியிருந்த 24 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில், தில்லியில் மத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 8 பேர் மார்ச் 21 ஆம் தேதி  ராஜஸ்தான் வழியாக கான்பூர் வந்தவர்கள், நகரத்தில் சுற்றி வருவதாகவும், அவர்கள் அனைவரும் பாபுபூர்வாவில் உள்ள ஒரு மசூதியில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை பிடித்த போலீஸார், அங்குள்ள லாலா லஜ்பத் ராய் (எல்எல்ஆர்) மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று டி.ஐ.ஜி (கான்பூர்) ஆனந்த் தியோ திவாரி தெரிவித்தார்.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு இடையே தில்லியில் தப்லிகி ஜமாத்தின் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஈரானைச் சேர்ந்த இப்ராஹிம் ஃபவுல் லாடி, அப்துல் ரஹீம், யூனஸ், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது ஷா ஹுசைனி, ஷபீர் அப்துல் ரஹீம், ஜரீன் முகமது மற்றும் ரஹ்மத்துல்லா, மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த தாவூத் அய்யூப் இஸ்மாயில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com