கரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை மறைக்கிறது சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனாவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்து தெரிவித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை 
கோப்புப் படம்
கோப்புப் படம்


வாஷிங்டன்: சீனாவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்து தெரிவித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் கண்டறிந்து பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. 

கரோனாவின் தோற்றுவாயான சீனாவில் 82,361 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,305 பேர் உயிரிழந்துள்ளனர், அதே நேரத்தில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவைவிட  அமெரிக்காவில் பலியும், பாதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க உளவுத் துறை, சீனா உண்மையான பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை வேண்டுமென்றே மறைத்து புள்ளி விவரங்களை அளித்துள்ளதாக ஒரு ரகசிய அறிக்கையை வெள்ளை மாளிகையில் சமர்பித்துள்ளது. 

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை மிகவும் ரகசியமானது என்பதால் முழு விவரங்கள் தெரியவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சீனாவின் கரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் துல்லியமானவை என்று எங்களுக்கு எப்படி தெரியும் அவற்றின் எண்ணிக்கை மறைக்கப்பட்டு உள்ளதாகவும், சீனாவுடனான உறவு ஒரு நல்ல உறவு" என்றும் அந்நாட்டு அதிபருடன் நெருக்கமாக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com