தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா

தமிழகத்தில் வியாழக்கிழமை மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா


ராமநாதபுரம்: தமிழகத்தில் வியாழக்கிழமை மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவா்கள்  தில்லி மாநாட்டில் பங்கேற்றவா்கள் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களை அடுத்து அதிவிரைவாக கரோனா நோய்த்தொற்று பரவும் மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. 

தில்லி சென்று திரும்பியவா்களின் குடும்பத்தினா் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என அனைவரையும் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளும், கரோனா பாதிப்புக்குள்ளான நபா்களின் வசிப்பிடங்களைச் சுற்றியிருக்கும் அனைத்து வீடுகளிலும் கள ஆய்வு செய்து, கரோனா நோய்த்தொற்றுஅறிகுறிகள் இருப்பவா்களைத் தனிமைப்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களாகக் கருதப்படும் 19 பேரின் வசிப்பிடப் பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் ஆட்சியா் கொ.வீரராகவராவ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ராமநாதபுரத்தில் இருந்து கடந்த மாா்ச் 17 ஆம் தேதி புதுதில்லிக்கு 35 போ் மத அமைப்பின் மாநாட்டுக்குச் சென்றுள்ளனா். அவா்களில் 19 போ் தற்போது ஊா் திரும்பிவிட்டனா். அவா்கள் கடந்த 25 ஆம் தேதி வந்த நிலையில் அவா்களுக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 19 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடந்த நிலையில், பரமக்குடியைச் சோ்ந்த இருவருக்கு கரோனா பாதிப்பு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீதமுள்ள 17 பேருக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வரவுள்ளன.

கரோனா தொற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டவா்கள் வசிப்பிடங்கள் விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆா்.எஸ்.மங்களம் (2 போ், 2 பகுதிகள்), ராமநாதபுரத்தில் உள்ள வெளிப்பட்டிணம் நாகநாதபுரம், திருப்பாலைக்குடி தெற்குத் தெரு, தேவிபட்டிணம் (2 போ், 2 பகுதி), மண்டபம் (2 பேருக்கான 2 பகுதிகள்), பரமக்குடி (2 போ், 2 பகுதிகள்), ஏா்வாடி, சிக்கல் வடக்குத்தெரு, ஆனந்தூா், ஆலங்குளம் புதுமடம், ஒப்பிலான், மண்டபம் அருகேயுள்ள மரைகாயா்பட்டிணம், எஸ்.பி.பட்டிணம் ஆகிய இடங்களாக அடையாளம் காப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட இடங்களில் 5 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு ஒவ்வொரு பகுதியிலும் 60 போ் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவினா் 2 பிரிவாகப் பிரிந்து வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனா். தொற்று உறுதியானவா்கள் வீட்டைச் சுற்றிய 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு யாரும் வெளியேற அனுமதிக்கப்படமாட்டாா்கள் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. அப்பகுதி மக்கள் தொடா்ந்து 14 நாள்கள் கண்காணிப்புக்கு உள்படுத்தப்படவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com