அடுத்த சில நாட்களில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரமாக உயரும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக அளவில் அடுத்த சில நாட்களில், கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரிக்கும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்.
அடுத்த சில நாட்களில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரமாக உயரும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: உலக அளவில் அடுத்த சில நாட்களில், கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரிக்கும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக  உலக சுகாதார அமைப்பின் தலைவர் குட்ரோஸ் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று தொடங்கியதில் இருந்து நான்காவது மாதத்திற்கு நுழையும்போது, நோய்த்தொற்றின் அதிவேக வளர்ச்சி மற்றும் உலகளாவிய பரவல் குறித்து நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்" என்று தெரிவித்தவர், உலகம் முழுவதும் கடந்த ஐந்து வாரங்களில் கரோனா நோய்த்தொற்றுக்கு புதியதாத பாதித்தவர்களின்  எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 

இதுவரை உலக அளவில் 47ஆயிரத்து 251 பேர் உயிரிழந்த்துள்ளனர், 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 419 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவற்றில் 12,430 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த ஐந்து வாரங்களில் புதிய நோய்த்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மற்றும் கடந்த வாரத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 

உலக அளவில் அடுத்த சில நாட்களில், கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரிக்கும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளைத் தவிர, இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று குறைவாகவே உள்ள ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் கரோனாவால் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளைக் காணலாம் என்று குட்ரோஸ் எச்சரித்தார்.

நோய்த்தொற்றை கண்டறிதல், சோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல், அத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணுவதில் அந்த நாடுகளும் தயாராக இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், நெருக்கடியின் போது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு மற்றும் பிற வாழ்வாதாரத் தேவைகள் இருப்பு இருப்பதையும் உறுதி செய்வதற்கான சமூக நல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

"பல வளரும் நாடுகள் இந்த வகையான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த போராடும்" என்று தெரிவித்தவர்,  அந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களை கவனித்துக்கொள்வதற்கும் பொருளாதார சரிவைத் தவிர்ப்பதற்கும் கடன் நிவாரணம் அவசியம் என்று குட்ரோஸ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com