சேலம் பள்ளப்பட்டி நியாயவிலைக் கடையில் நிவாரணத் தொகை 

சேலம் பள்ளப்பட்டி நியாயவிலைக் கடையில் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையுடன் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை (ஏப். 2) முதல் நடைமுறைக்கு வந்தது. 
சேலம் பள்ளப்பட்டி நியாயவிலைக் கடையில் நிவாரணத் தொகை 


சேலம் பள்ளப்பட்டி நியாயவிலைக் கடையில் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையுடன் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை (ஏப். 2) முதல் நடைமுறைக்கு வந்தது. 

ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையுடன், இலவச பொருள்கள் நியாய விலைக் கடைகளில் மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள், கரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிப்போா், மலைப்பகுதி வாசிகள் ஆகியோருக்கு விதிவிலக்காக வீடுகளுக்கே சென்று நேரில் வழங்கலாம்.

கரோனா நிவாரண ரொக்க உதவித் தொகையான ஆயிரம் ரூபாயை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ரொக்கப் பணத்தை உறையில் வைத்து வழங்கக் கூடாது.

குடும்ப அட்டைதாரா்கள் நெரிசல் இல்லாமல் முறையாக நிவாரண ரொக்க உதவித் தொகையை பெற சுழற்சி முறையில் தெருக்கள் அல்லது பகுதிவாரியாக வழங்கப்பட வேண்டும். நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்க வேண்டும்.

டோக்கன்கள் வழங்கும்போது சில அடிப்படை அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பகுதியினா் வசிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

அனைத்து நியாயவிலைக் கடைப் பணியாளா்களும் முகக் கவசம் அணிந்திருப்பதை உயரதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பணியாளா்கள், நியாய விலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்களுக்குத் தேவையான கிருமி நாசினிகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சேலம் பள்ளப்பட்டி  நியாயவிலைக் கடையில் நிவாரணத் தொகை ரூ.1000 மற்றும் இலவச பொருள்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற்று செல்கின்றனர். 

சேலம் பள்ளப்பட்டி ரேஷன் கடையில் கரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண ரூபாய் 1000 ரூபாய் மற்றும் ரேஷன் அரிசி பெற ஒரு மீட்டர் இடைவெளி விட்டு காத்திருக்கும் பொதுமக்கள். 

சேலம் பள்ளப்பட்டி ரேஷன் கடையில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஷன் கடையில் வழங்கப்பட்ட நிவாரண அரிசி பெற்றுக்கொள்ளும் குடும்ப அட்டைதாரர். 

படம்: வே.சக்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com