11 லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு 

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 11 லட்சத்தை தாண்டியது
11 லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு 


ஜெனீவா: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 11 லட்சத்தை தாண்டியது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவாகி, உலகம் முழுவதும் 216 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள கரோனா நோய்த்தொற்று. சனிக்கிழமை நிலவரப்படி 11 லட்சத்து, 17 ஆயிரத்து 860க்கும் மேற்பட்டோர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இந்த நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 475, இத்தாலியில் 1 லட்சத்து19 ஆயிரத்து 827, ஸ்பெயினில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 199, ஜெர்மனியில் 91 ஆயிரத்து159, பிரான்ஸில் 64 ஆயிரத்து 338 ,ஈரானில் 53 ஆயிரத்து 83, பிரிட்டனில் 38 ஆயிரத்து 168க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.  

நோய்த்தொற்றால் உலகம் முழுவதும்  59 ஆயிரத்து 197 பேர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்து 28 ஆயிரத்து 975 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் மீட்கப்பட்டுள்ளனர். 

கடந்த 5 வாரங்களில் கரோனா நோய்த்தொற்றும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், இன்னும் சில நாட்களில்நோய்த்தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 50 ஆயிரத்தை தாண்டிவிடும் என்று தெரிவித்திருந்தது நினைவில்கொள்ளத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com