ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் வரை நீடிக்கலாம்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் வரை நீடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் வரை நீடிக்கலாம்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்


இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் வரை நீடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜூன் நான்காவது வாரத்திற்கும் செப்டம்பர் இரண்டாவது வாரத்திற்கும் இடையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவாகி உலகம் முழுவதும் 220 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள கரோனா நோய்த்தொற்று, வல்லரசு நாடான அமெரிக்கா,  இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது.  

கரோனா நோய்த்தொற்றுக்கு அமெரிக்காவில் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது. 

நோய்த்தொற்று பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேகமாக பரவி வரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட வாய்ப்பு இல்லை என்றும் படிப்படியாகவே - இனிப் பரவ வாய்ப்பில்லை என்று உறுதியாகக் கருதப்படும் மாநிலங்களில் தொடங்கி - ஒவ்வொன்றாக விலக்கிக் கொள்ளப்படலாம் என்றும்,  ஒரு மாநிலத்திலேயேகூட குறிப்பிட்ட மாவட்டங்களுக்கேற்ப, அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கேற்ப கட்டுப்பாடுகள் தொடரக் கூடும். இன்னும் சில குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு காலத்தைப் போலவே கடுமையான கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புதிய ஆய்வு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள. அதில், ‘இந்தியாவில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில்தான் நீக்கப்படலாம். இந்திய சுகாதாரத்துறை மற்றும் அரசின் திட்டங்களின் செயல்பாட்டால் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத்தே ஊரடங்கு உத்தரவுகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில்தான் நோய்த்தொற்று பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை உத்தரவை நீட்டிக்கும் திட்டமும் தற்போதைக்கு இல்லை என அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பிரேசில், போலந்து மற்றும் கொலம்பியா போன்ற பிற நாடுகள் விதித்த ஊரடங்கு உத்தரவுகளுக்கு இணங்க, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மார்ச் 24 ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.

ஏப்ரல் 4 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 82 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 229 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முக கவசம் அணிந்து செல்லுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com