திட்டமிட்டபடி நவ. 3-ம் தேதி அமெரிக்‍க அதிபர் தேர்தல்: டிரம்ப்

திட்டமிட்டபடி நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 
திட்டமிட்டபடி  நவ. 3-ம் தேதி அமெரிக்‍க அதிபர் தேர்தல்: டிரம்ப்


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று வல்லரசான அமெரிக்காவையும் ஆட்டிப்படைத்து வரும் நிலையிலும், திட்டமிட்டபடி நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி, அதிபர் டிரம்பின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைவதையொட்டி, வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று அமெரிக்காலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் கரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் அமெரிக்கா, அதிலிருந்து மீண்டு, பொருளாதார சரிவை சீர் செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் அதிபர் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது.
 
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப்,  அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும்.  தேர்தலின்போது போலியான வாக்குகளைத் தடுக்க, வாக்காளர்கள் அனைவரும் அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் அனைவரும் துணியால் ஆன முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறும், மருத்துவப் பணியாளர்கள் மருத்துவ முகக் கவசங்களை பயன்படுத்துமாறும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com