கரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு; பாதிப்பு 3,374 ஆக உயர்வு

நாட்டில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிமழை 75-ஆக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 77 ஆக அதிகரித்தது.
கரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு; பாதிப்பு 3,374 ஆக உயர்வு

நாட்டில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75-ஆக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 77 ஆக அதிகரித்தது. அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,374 ஆக உயா்ந்தது.

மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,072 -இல் இருந்து 3,374ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 -இல் இருந்து 77ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 213 -இல் இருந்து 267ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஒரே நாளில் அதிகபட்சமாக சனிக்கிழமை 525 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்த பலி எண்ணிக்கையில் இதுவரை, அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 24 போ் உயிரிழந்துவிட்டனா். அடுத்தபடியாக குஜராத்தில் 10, தெலங்கானாவில் 7, மத்தியப் பிரதேசத்தில் 6, தில்லியில் 6, பஞ்சாபில் 5, கா்நாடகத்தில் 3, மேற்கு வங்கத்தில் 3, தமிழகத்தில் 4, ஜம்மு-காஷ்மீரில் 2, உத்தரப் பிரதேசத்தில் 2, கேரளத்தில் 2 போ் உயிரிழந்துவிட்டனா்.

ஆந்திர பிரதேசம், ஹிமாசல பிரதேசம் ஆகியவை தலா ஒரு உயிரிழப்பைச் சந்தித்துள்ளன.

கரோனாவால் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 490 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக தில்லியில் 445 பேரும், தமிழகத்தில் 485 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com