கரோனா ஊரடங்கு: சேலத்தில் இறைச்சிக் கடைகளில் குவிந்த பொதுமக்கள்

சேலத்தில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் ஞாயிற்றுக்கிழமை மீன், இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனா்.
சேலம் அடுத்த ஓமலூர் பிரதான சாலையில் அரபி கல்லூரி அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இறைச்சி மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை திரண்ட பொதுமக்கள்.

சேலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இறைச்சி  கடைகள் திறப்பட்டிருந்தன. அதனால், மீன்கள், ஆடு மற்றும் கோழி இறைச்சி வாங்குவதற்காக அக்கடைகளில் முகக் கவசம் அணியாமலும், ஒரே இடத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் குவிந்தனா்.

சேலம் ஓமலூர் பிரதான சாலையில் அரபிக்கல்லூரி அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இறைச்சி மார்க்கெட்டிற்கு இறைச்சி எடுக்க ஞாயிற்றுக்கிழமை வாகனத்தில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து செல்லும் வாகன ஓட்டிகள். 

சேலம் ஓமலூர் பிரதான சாலை அரபிக் கல்லூரி அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இறைச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் இறைச்சி எடுக்க வந்த பொதுமக்கள்.

 படம்: வே.சக்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com