இந்தியாவில் கரோனாவுக்கு முதல்முறையாக மருத்துவர் பலி

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு இந்தியாவில் முதல்முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
இந்தியாவில் கரோனாவுக்கு முதல்முறையாக மருத்துவர் பலி


இந்தூர்: உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு இந்தியாவில் முதல்முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 166 பேர் உயிரிழந்துள்ளனர், 473 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தமருத்துவர் ஒருவர் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். 

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரைச் சேர்ந்த  மருத்துவர் சத்ருகன் புன்ஞ்வானி கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு முதல்முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தூரில் மட்டும் நோய்த்தொற்றுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com