ஈரோடு கருங்கல்பாளையத்தில் தடை உத்தரவை மீறி  செயல்பட்ட டிபார்ட்மென்ட் ஸ்டோர்  சீல் வைப்பு

அரசு அறிவித்த நேரத்தை மீறி வியாபாரம் நடைபெற்றது தெரியவந்ததை அடுத்து அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோர் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் தடை உத்தரவை மீறி  செயல்பட்ட டிபார்ட்மென்ட் ஸ்டோர்  சீல் வைப்பு

ஈரோடு: ககொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம்  எதிரொலித்ததன் காரணமாக  இந்தியா முழுவதும் கடந்த 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. ஆனால் மக்களின் அத்தியாவசிய பொருட்களான மளிகை கடை காய்கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் ஆனால் அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசு 
அறிவித்திருந்தது. 

அதன்படி மளிகை கடைகள் காலை முதல் மதியம் ஒரு மணி வரை செயல்பட வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.  உரிய நேரத்திற்கு பிறகு வியாபாரம் செய்யக்கூடாது என்றும் அவர் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

ஈரோடு மாவட்டத்திலும் மளிகை கடைகள் அனைத்தும் மதியம் ஒரு மணிவரை செயல்பட்டு வந்தது.  ஆனால் ஒருசில இடங்களில் தடை உத்தரவை மீறியும் உரிய நேரத்திற்கு பிறகும் மளிகை கடை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்  இயங்கி வருவதாக புகார் வந்தது. இதையடுத்து தாசில்தார் மேற்பார்வையில் அதிகாரிகள்,போலீஸாருடன் இணைந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், ஈரோடு, கருங்கல்பாளையம், கே. எஸ். நகர் மரப்பாலம் 4 -வது வீதியில் அற்புதராஜ் என்பவருக்கு  சொந்தமான டிபார்ட்மென்ட் ஸ்டோர் அரசு அறிவித்த நேரத்தை மீறி ஏங்கி வந்ததாக புகார் வந்தது.  

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர் மற்றும் கருங்கல்பாளையம் போலீஸார் சென்று பார்வையிட்டனர். அப்போது அரசு அறிவித்த நேரத்தை மீறி வியாபாரம் நடைபெற்றது தெரியவந்ததை அடுத்து அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோர் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com