மதுரையில் காஞ்சி சங்கர மடம் சார்பில் இலவச உணவு விநியோகம்

மதுரையில் 144 தடை உத்தரவால் உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுவோருக்கு  காஞ்சி சங்கர மடம் மற்றும் தாம்ப்ராஸ் சார்பில் இலவச உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
மதுரையில் காஞ்சி சங்கர மடம் சார்பில் இலவச உணவு விநியோகம்

மதுரை:  மதுரையில் 144 தடை உத்தரவால் உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுவோருக்கு  காஞ்சி சங்கர மடம் மற்றும் தாம்ப்ராஸ் சார்பில் இலவச உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

மதுரையில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆதரவற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உணவு கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், உணவின்றி தவிப்பவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் தினசரி இலவச உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் காஞ்சி சங்கர மடத்தின் மதுரை கிளை சார்பில் தினசரி 150 பேருக்கு இலவச உணவு பொட்டலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் காஞ்சி சங்கர மடத்தின் நிர்வாகிகள் பங்கேற்று உணவுகளை வழங்கி வருகின்றனர்.

காஞ்சி சங்கர மடம் அளித்துள்ள ஆலோசனையின் பேரில் ஆதரவற்றோருக்கு தினசரி உணவு வழங்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதேபோல மதுரை தாம்ப்ராஸ் அமைப்பின் சார்பிலும் தினசரி 150 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com