சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு 2,299; பலி 8 ஆக உயர்வு

சிங்கப்பூரில்  சனிக்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்றுக்கு புதிதாக 191 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,299 ஆக அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு 2,299; பலி 8 ஆக உயர்வு

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 191 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,299 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 90 வயதுடைய முதியவர் ஒருவர் நோய்த்தொற்றால் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சிங்கப்பூரில் முழு வீச்சில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூர் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சிங்கப்பூரில் சனிக்கிழமை ஒரே நாளில் 191 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து சிங்கப்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,299 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே 90 வயது முதியவர் ஒருவர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

சிங்கப்பூரில் கடந்த 8-ஆம் தேதி 32 வயது இந்தியா் ஒருவா் உயிரிழந்துவிட்டாா். அவா் கரோனாவால் உயிரிழக்கவில்லை; இதயப் பிரச்னை காரணமாவே உயிரிழந்தாா் என்பது உடல்கூராய்வில் உறுதி செய்யப்பட்டது. விமானப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை என அந்நாட்டு அரசு கூறியிருந்தது நினைவில்கொள்ளத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com