உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால்  (கொவைட்-19) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி உள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது


உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால்  (கொவைட்-19) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி உள்ளது. 4.84 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்தைத் தாண்டியது.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 598 ஆக   உயர்ந்துள்ளது. 

புதன்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி  அந்த நோய் பாதிப்பால் 1 லட்சத்து 27 ஆயிரத்து 598-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அவா்களில், 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்தவா்கள் ஆவா். நோய்த்தொற்றுக்கு இதுவரை 19 லட்சத்து 98 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் 4 லட்சத்து 91 ஆயிரத்து 842 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

மேலும், உலகம் முழுவதும் 220-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் 20 லட்சத்து 14 ஆயிரத்து 554-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதில் 51 ஆயிரத்து 603 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேகமாக பரவி வரும் கரோனாவுக்கு அமெரிக்காவில் 26 ஆயிரத்து 64 பேர் பலியாகி உள்ளனர். 

நாடுகளின் அரசுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு தரும் தகவல்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் உண்மையிலேயே கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை, அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டதை விட மிகவும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com