தில்லியில் வீடுகளுக்கு பீட்ஸா டெலிவரி செய்தவருக்கு கரோனா 

தில்லியின் தெற்கு பகுதியில் வீடுகளில் பீட்ஸா டெலிவரி செய்த நபருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் வீடுகளுக்கு பீட்ஸா டெலிவரி செய்தவருக்கு கரோனா 


புதுதில்லி: தில்லியின் தெற்கு பகுதியில் வீடுகளில் பீட்ஸா டெலிவரி செய்த நபருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பீட்ஸா டெலிவரி செய்த 72 வீடுகளில் உள்ளவர்களை வீட்டிலேயே இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவை சிவப்பு மண்டலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதிகளவில் கரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் ஆரஞ்ச் மண்டலங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தச் சிவப்பு, ஆரஞ்ச் மண்டலங்களில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. 

அந்தவகையில், தில்லியில் 10 ஆயிரம் போ்களுக்கு 7 போ் என்ற அளவில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது மற்றைய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.

தில்லிக்கு அடுத்த நிலையில் கேரளம் உள்ளது. கேரள மாநிலத்தில் 10 ஆயிரம் பேருக்கு 4.2 போ் என்ற அளவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள ராஜஸ்தானில் 10 ஆயிரம் பேருக்கு 3.6 போ் என்ற அளவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, மகாராஷ்டிரா, சண்டீகா், கோவா, உத்தரக்கண்ட் ஆகிய மாநிலங்களில் பத்தாயிரம் பேருக்கு முறையே, 2.8, 2.5, 2.4,1.7 என்ற அளவில்தான் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தெற்கு தில்லியின் மால்வியா நகர் பகுதியில் பீட்ஸா டெலிவரி செய்த நபர் ஒருவருக்கு புதன்கிழமை கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த நபர் பீட்ஸா டெலிவரி செய்யப்பட்ட சுமார் 72 வீடுகளில் வசிப்பவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பீட்ஸா டெலிவரி நபருடன் தொடர்பில் இருந்த 17 டெலிவரி நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 72 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com