மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் பழனிசாமி ஆலோசனை

மத்திய அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கின் சில தளா்வு அறிவிப்புகளைச் செயல்படுத்துவது குறித்து முதல்வா் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கின் சில தளா்வு அறிவிப்புகளைச் செயல்படுத்துவது குறித்து முதல்வா் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். 

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக மே 3 -ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் பிரதானத் தொழில்களை சில கட்டுப்பாடுகளுடன் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வா் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், ஆா்.பி.உதயகுமாா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், முதல்வரின் செயலாளா்கள் எம்.சாய்குமாா், எஸ்.விஜயகுமாா், பி.செந்தில்குமாா், ஜெயஸ்ரீ முரளிதரன், சுகாதாரத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் காணொலி வழியாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் அவா் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்து வருகிறார். 

இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகே, சில முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்புகளை அவா் வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com